தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் குப. கிருஷ்ணன்
நிம்பர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகிறார். அவரை வரவேற்க பொதுமக்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். மேலும் த வெக தொண்டர்கள், நிர்வாகிகள் வழிநெடுகிலும் திரளாக திரண்டு நின்று வரவேற்பு அளிப்பார்கள்.திருச்சி விமான நிலையம் முதல் ஜோசப் கல்லூரி மைதானம் வரை உள்ள இடங்கள் அனைத்தும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தான்.
எனவே பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். கிழக்கு தொகுதியில் வாக்களித்த பொதுமக்களுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவிக்கிறார். பள்ளி வளாகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த கூடாது என்று சென்ற திமுக ஆட்சியில் அரசாணை போடப்பட்டு உள்ளது. ஆனால் நாங்கள் நடத்துவது பள்ளிக்கூட மைதானத்தில் அல்ல. மாறாக கல்லூரி மைதானத்திற்கு மேற்கே உள்ள பகுதியில் நிகழ்ச்சி நடத்துகிறோம்.
நாங்கள் பொதுக்கூட்டம் நடத்தவில்லை. ஆளுங்கட்சி கூட்டம் நடத்தவில்லை. இங்கு பள்ளி வளாகத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஒரு திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். முதல் யூத்தம் வந்த போது இந்த வளாகத்தில் காமராஜர், ராஜாஜி போன்றவர்கள் இங்கு வந்து பேசி உள்ளார்கள்.கல்லூரி வளாகத்திற்கு மேற்கு பகுதியில் நாங்கள் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.பள்ளி திறப்பதற்கு மூன்று நாட்கள் இருக்கிறது. எனவே அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் அந்த இடத்தில் நிகழ்ச்சி நடத்துகிறோம். இது பொருந்தாது வாக்களித்த பொது மக்களுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவிக்கிறார். அதுதான் கூட்டத்தின் நோக்கம்.நாங்கள் உங்களை எதிர்பார்த்து வாக்களித்தோம். எங்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுங்கள் என்று கூறும் வகையில் மக்கள் விழா நடத்துக்கிறார்கள். பொது மக்கள் வாழ்த்து சொல்லும் விழா வாழ்த்து சொல்லும் போது நன்றி சொல்வது தமிழர் மரபு. அந்த வகையில் முதலமைச்சர் அங்கு நன்றி தெரிவிக்கிறார்.
பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் முதலமைச்சர் விஜய் சுற்றுப்பயணம் அமைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துறையினர் செய்துள்ளனர். முதலமைச்சரின் முகத்திற்கும், அவருடைய சின்னத்திற்கும் தான் பொதுமக்கள் வாக்களித்தார்கள்.வேட்பாளரை என்னை பார்த்து அல்ல. அந்த வகையில் அவர் வருங்காலத்தில் தமிழகம் முழுவதும் சென்று பொது மக்களை சந்திப்பார் இவ்வாறு குப. கிருஷ்ணன் கூறினார்
