கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்து உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டை பெற்றுள்ளது. 1980-களின் மதுரையை பின்னணியாக கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், இது அவரது திரையுலக பயணத்தில் 1540-வது திரைப்படமாக அமைந்துள்ளது. இத்திரைப்படம் வரும் செப்.25-ம் தேதி படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
