அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்கிற இளவரசன், த/பெ பெரியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 26.05.2022 அன்று காவல் ஆய்வாளர் சுமதி வழக்கு பதிவு செய்தார். விசாரணையில் ராமு சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ராமு மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு,போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ராமு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கின் இறுதி விசாரணை அரியலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் சார்பில் அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அரியலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி செல்வம் குற்றவாளி ராமுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து காவல்துறையினர் ராமுவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அரியலூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை….
- by Authour
