Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடையில் பணத்தை வாங்கி மின்னல் வேகத்தில் பறந்த ஆசாமி…

கோவை கரும்பு கடை சாரமேடு பகுதியில் பி.பி சம்சுதீன் என்பவருக்கு சொந்தமான அரஃபா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மர்ம ஆசாமி ஒருவர் பொருட்கள் வாங்கிக் கொண்டு அந்த கடைக்கு செல்வதை தேவையான சில்லறை ரூபாய் நோட்டுகள் தருவதாக கூறி 22,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடையில் பணி புரியும் நபரை அழைத்துச் சென்று உள்ளார். பின்னர் பெட்ரோல் பங்கில் சில்லறை இருப்பதாக கூறி கடையில் பணி புரிந்த நபரும் அதனை நம்பி சென்று நிலையில் பெட்ரோல் பங்க் வாசலில் கடை ஊழியரை இறக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் தப்பித்து சென்று விட்டார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். தற்பொழுது இந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
error: Content is protected !!