தமிழகத்தில் பட்டாசை விட பட்டாக்கத்தி சத்தம்தான் அதிகமாக கேட்கிறது என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 மாத தவெக ஆட்சிக்கு தீபாவளி நாளில் நடந்த கொலைகளே சாட்சி. எந்த அதிகாரிகளும் முதலமைச்சரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் ஸ்கோர் போன்று கொலைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உங்கள் டிஜிபியும், தலைமைச் செயலாளரும் முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் அளித்துள்ளனர் என கூறினார்.
பட்டாசை விட பட்டாக்கத்தி சத்தம்தான் கேட்கிறது – ஐ.பரந்தாமன் குற்றச்சாட்டு
