தமிழகத்தில் தவெக ஆட்சி அனைத்து துறைகளிலும் வேகமாகப் பின்னோக்கிச் செல்வதாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கையசைத்து விளம்பரம் தேடுவதற்காக முதலமைச்சர் விஜய் புறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த புரிதல் இல்லாமல் முதலமைச்சர் செயல்படுவதாகவும் சாடியுள்ளார். மேலும், ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தமிழகத்தின் வளர்ச்சி தேசிய சராசரிக்கும் கீழே சென்றுள்ளதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அனைத்து துறைகளிலும் ரிவர்ஸ் கியரில் செல்கிறது”.. மு.க.ஸ்டாலின்
