கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசின் அனுமதி பெற முயற்சிப்பதை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்து, ரூ.16,745 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளார். இது தமிழ்நாட்டின் நீருரிமையையும், லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். தமிழ்நாடு பாலைவனமாகும். இதற்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்க கூடாது – சீமான்
