உத்தர் பிரதேஷ்; ராமர் கோவில் திருட்டு விவகாரத்தில் பிரதமர் திரு. மோடியின் மௌனம் நாட்டிற்கு மிகவும் கவலையளிப்பதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ். இந்த விவகாரத்தின் அணைத்து அம்சங்களையும் விசாரிக்க உச்சநீதி மன்றத்துக்கு நேரடியாக அறிக்கை அளிக்கும் வகையில் ஒரு சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வலியுறித்தியுள்ளார்.
ராமர் கோயிலின் காணிக்கை திருட்டு என்பது நம்பிக்கை மீது இழைக்கப்பட துரோகம் என்றும், இந்த திருட்டு ஒருபோதும் மறைந்திருக்காது என்றும் காலப்போக்கில் எல்லாம் வெளிவந்தே தீரும் என்றும் x தலத்தில் பதிவியிட்ட அவர் அயோத்தியா ராமர் கோவிலில் காணிக்கை திருடப்பட்ட விவகாரத்தில் நாள்தோறும் வெளிவரும் புதிய தகவல்கள் பாஜக ,ஆர்எஸ்எஸ்,மற்றும் பீஎச்பி ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களை காப்பாற்ற மத்திய அரசும் , உத்ரப்ரதேச மணிலா அரசும் முயற்சிப்பதையே அம்பலப்படுத்துவதாக சாடியுள்ளார்.
இந்த விவகாரம் இப்போது திருட்டோடு மற்றும் நிறுத்தவில்லை ஒரு விசாரணை என்ற பெயரில் இந்த நாட்டு மக்களும் உச்சநீதி மன்றமும் ஏமாற்றப்பட்டனவா என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வி என பதிவியிட்டுள்ள ஜெயராம் ரமேஷ் மக்களை ஏமாற்றுவதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவும் நீதிமன்றத்துக்கு காட்டுவதற்காக மற்றொரு குழுவும் என மொத்தம் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன என்பது தெளிவாகி இருப்பதாக கூறியுள்ளார்.
