Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திரைப்படங்களில் கஞ்சா காட்சிகள்இருக்கக் கூடாது!நடிகர் ஜி.வி.பிரகாஷ் வலியுறுத்தல்

திரைப்படங்களில் கஞ்சா காட்சிகள்இருக்கக் கூடாது!

பொதுவாக திரைப்படங்களில் கஞ்சா பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்பது தான் எனது விருப்பமும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தஞ்சாவூரில் பேட்டி.

தஞ்சை ஸ்ரீபதி தியேட்டரில்
ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் “நிஞ்சா” திரைப்படத்தின் பூஜை

படக்குழுவினருடன் ரசிகர்களும் பங்கேற்றனர்.

தஞ்சையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் முருகு அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் நிஞ்சா (NINJA ) என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர்

ஏற்கனவே சென்னையில் வெளியிடப்பட்டது . இந்த நிலையில் நிஞ்சா திரைப்படத்தின் பட

பூஜை இன்று தஞ்சாவூர் ஸ்ரீபதி சினிமா தியேட்டரில் நடைபெற்றது . படத்தின் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் படக்குழுவினர் குத்து விளக்கேற்றினர். தொடர்ந்து பட பூஜை

நடைபெற்றது. தஞ்சையில் முதல் முறையாக சினிமா படத்தின் பூஜை நடைபெற்றது

குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேட்டியில்
தஞ்சாவூரை மையப்படுத்தி நிஞ்சா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் கதையை கூறிய உடனே எனக்கு பிடித்து விட்டது.
காமெடி, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடன் நிஞ்சா திரைப்படம் இருக்கும் . குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். அடுத்த ஆண்டு படம் வெளியாகுகிறது. படம் வெளிவந்த பிறகு அனைவரும் தியேட்டருக்கு வந்து பாருங்கள். இந்த படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. பொதுவாக திரைப்படங்களில் கஞ்சா பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்பது தான் எனது விருப்பமும். என தெரிவித்தார்.
முன்னதாக ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் படக்குழுவினருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து

கொண்டனர்.
சாய் தேவானந்த் மற்றும் சினிஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் நாயகியாக பிரத்னா நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக ஹரிஷ் கண்ணன், இசையமைப்பாளராக சீன் ரோல்டன்,

இணை தயாரிப்பாளராக சாய் வெங்கடேஷ்வரன், பட தொகுப்பாளராக கணேஷ் சிவா பணி புரிகின்றனர்.

error: Content is protected !!