பெண்ணை தவறாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது
திருச்சி என்எஸ்சிபி சாலை பகுதியை சேர்ந்தவர் நிவேதா 27 இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே பயணம் மேற்கொண்டார் அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோவை அணுகினார் ஆட்டோவை தெ ன்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த
முகமது மைதீன் ( 28 ) ஓட்டினார். அப்போது நிவேதாவிற்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையே கட்டணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது இதில்
ஆட்டோ டிரைவர் முகமது மைதீன் நிவேதாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தவறாக பேசியுள்ளார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து முகமது மீது கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாற்றுத்திறனாளி பெயிண்டர் மாயம்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (37). பெயிண்டர். இவர் காது மற்றும் வாய் பேச முடியாதவர். இந்த நிலையில் இவர் தன் வீட்டிற்கு செல்ல சத்திரம் பேருந்து நிலையம் வந்தார் ஆனால் அங்கிருந்து அவர் வீடு செல்லவில்லை எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சவுந்தரராஜனை தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு
திருச்சியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இரண்டு பெண்கள் தங்கை திருடி சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோட்டை போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கோட்டை காசியப்பிள்ளை சந்தை சேர்ந்தவர் மங்கம்மாள் ( 72 ) இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கே வந்த இரண்டு பெண்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்காக வந்துள்ளதாக கூறி வீட்டிற்குள் வந்துள்ளனர்.
அப்போது அவருக்கு உடலில் ஏதும் பாதிப்பு உள்ளதா என கேட்டுள்ளனர் இது குறித்து மங்கம்மாள் கூறிய போது அதை சரி செய்வதாக அவரது கையைப் பிடித்துக் கொண்ட ஒரு பெண் அவரை இறுக பற்றிக் கொண்டார் அப்போது மற்றொரு பெண் வீட்டுக்குள் பெட்டியில் வைத்திருந்த மூன்றரை பவுன் மதிப்புள்ள ஒரு தங்க செயின் மற்றும் இரண்டரைப் பவுன் ஒரு தங்க செயின் என இரண்டு செயின்களை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலிலேயே வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி இடம் செயின் திருடி சென்ற சம்பவம் திருச்சி மக்களிடம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி இன்றி மணல் கடத்தல் -லாரி பறிமுதல்
திருச்சி திண்டுக்கல் சாலை கோரை ஆறு பகுதி அருகே திருச்சி மாவட்ட புவிசார் மற்றும் சுரங்க துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு உரிமை கோராத ஒரு லாரி 4 யூனிட் மணலுடன் நின்றது தெரியவந்தது உடனடியாக அலுவலர்கள் எடமலை பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதை அடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
