Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவையாறில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம்…

தஞ்சை மாவட்டம், திருவையாறில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம் நடந்தது.  திருவையாறு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை வட்டார வளமயம் சார்பில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

திருவையாறு, மேல திருப்பந்துருத்தி பேரூராட்சி உறுப்பினர்கள் 30 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திருவையாறு பேரூராட்சித் தலைவர் கஸ்தூரிநாகராஜன், மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சித் தலைவர் ஜாப்ரின்ரோஜா ஆகியோர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜன் வரவேற்று பேசினார். இதில் கல்வி உரிமைச் சட்டம், பள்ளி மேம்பாட்டு திட்டம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பள்ளிகளில் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி கருத்தாளராக மணிவண்ணன் செயல்பட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்சி ரேணுகா செய்திருந்தார். பயிற்சியை மேற்பார்வையாளர் சரவணன் ஒருங்கிணைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!