இன்ஸ்பெக்டரிடம் இலவச பயிற்சி பெற்ற 83 இளைஞர்கள், ராணுவம் & போலீஸுக்கு தேர்வாகியுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது. 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்த சதீஸ்குமார் தற்போது திருவாரூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுயமாக படித்து இந்நிலைக்கு உயர்ந்த அவர், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் பயிற்சி பெற்று தேர்வான 83 பேரையும் SP கருண் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

