Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

திருச்சி, திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை கூத்தைபார் சாலையில் உள்ள ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் நடத்திய சோதனையில்
லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த திருச்சி அரியமங்கலம் கருணாநிதி தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி தமிழரசி (எ) தமிழ்ச்செல்வி (40) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரிடமிருந்த ஒரு ஆண்ட்ராய்டு போன் ரூ.16,000 ரொக்க பணம் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தததோடு லாட்டரி சீட்டு விற்பனை செய்த தமிழரசியையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!