திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி இவரது மனைவி தனலட்சுமி வயது (43) இவரது வீட்டின் அருகே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக பக்கத்து வீட்டை சேர்ந்த சரோஜா, முத்துலட்சுமி, புனிதா, சந்திரசேகர் ஆகியோர் தனலட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி முடியை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தனலட்சுமி கிராம தலைவர் ரமேஷ் (48) என்பவருடன் திருவெறும்பூர் போலீஸ் நிலையம் வந்து எஸ்ஐ கவிதாவிடம் புகார் கொடுத்துவிட்டு திரும்ப ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தனலட்சுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது வழியில் உள்ள பிரியங்கா நகர் பகுதி காட்டுக்குள் ரமேஷ் தனலெட்சுமியை அழைத்துச் சென்று தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இது சம்பந்தமாக தனலட்சுமி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ததோடு ரமேஷை கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதவி செய்யும் சாக்கில் சில்மிஷம்.. திருச்சி கிராமத்தலைவர் கைது..
- by Authour
