Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவெறும்பூர்- திமுக வேட்பாளர் மகேஸ் மனுதாக்கல்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூரே அதிரும் வகையில் .வானவேடிக்கைகளும் பல்வேறு விதமான இசைக்கருவிகளும் கரகாட்டம் பொம்மை ஆட்டத்துடன் கூட்டணி கட்சியை நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் .

தமிழகம் முழுவதும் வரும் 23 ஆம்ஸதேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி முதல் 6‌ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது மீட்பு மனுக்களை தீவிரமாக தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் திமுக வேட்பாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெல் தொமுச தொழிற்சங்க அலுவலகத்தில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் கரகாட்டம் பொம்மை ஆட்டம் மற்றும் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக வந்தவருக்கு வழியில் தொண்டர்கள் வேல் கொடுத்தனர் பின்னர் கிரேன் மூலம் மாலை அணிவித்தனர்.

அதன் பிறகு அன்பில் மகேஸ்பொய்யாமொழி கூட்டணி கட்சியை நிர்வாகிகளுடன் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை திருவெறும்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரான அமுதாவிடம் வழங்கினார்.

பின்னர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு வேட்பாளராக மூன்றாவது முறை தன்னை நிறுத்தியதற்கு தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதற்காகவும் திருவெறும்பூர் தொகுதியில்தான் செய்த வளர்ச்சி பணி மற்றும் கூட்டணியை கட்சியினரும் பலம் மற்றும் ஐந்து ஆண்டுகள் செய்த சாதனை மீண்டும் வெற்றி பெற்ற பிறகு என்ன செய்ய போகிறோம் என்ற தேர்தல் வாக்குறுதியை வைத்து தேர்தலில் வாக்கு கேட்பதாகவும்

2016 ஆம் ஆண்டு முதல் முதலாக இந்த தொகுதியில் போட்டியிட்ட வந்த பொழுது எந்த மனநிலையில் வந்தேனோ அதே மனநிலையில் தான் தற்போது உள்ளேன்.

இன்னும் தொகுதி மக்கள் நான் அதிகம் செய்வேன் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

நான் எம்எல்ஏவாகவோ அமைச்சராகவோ அல்லது ஒரு சேவகனாக இந்த தொகுதியில் செயல்படுவேன்

மக்களுக்கு தேவையான பல்வேறு நலப் திட்டங்களை தொகுதியில் மேற்கு கொண்டுள்ளேன் இதுவரை ரூ 450 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும்

திருவெறும்பூர் தொகுதியில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என பல்வேறு பட்ட நிர்வாகம் இருந்தாலும் அவர்களுக்கு தேவையான அனைத்து செய்து கொடுக்கப்படும்.

அதேபோல் அரியமங்கலம் குப்பை கிடங்கு மாற்றுவதற்கு உரிய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தான் அமைச்சராக உடனே இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டதாகவும் அந்த இடத்தில் குப்பை அதிகமாக இறங்கி உள்ளதால் அதில் கட்டிடங்கள் கட்ட முடியாது அதனால் அந்த இடத்தில் தற்பொழுது பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவிடம் கேட்டு நிதி பெற்று நடைபெறும் ,

10 ஆண்டுகளுக்கு பிறகு தான் அந்த இடத்தில்கட்டிடம் கட்டப்படும் இந்த குப்பையை ஈரப்பதம் உள்ள குப்பை மற்றும் காய்ந்த குப்பை என இரண்டாக தரம் பிரித்து அவற்றை அங்கிருந்து அகற்றும் பணியில் நடைபெறுகிறது, இரு 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த இடத்திலிருந்து குப்பைகள் அகற்றப்படும்

தமிழகத்தில் எத்தனை போட்டிகள் இருந்தாலும் தமிழகத்திற்கும் டெல்லிக்கும் தான் இடையில் தான் போட்டி நாம் என்ன செய்தோம் என்பதை சொல்லித்தான் வாக்கு சேகரிக்கிறோம்.
கல்வியில்தமிழகத்தில் முன்மொழிக் கொள்கையை நாம் ஏற்க முடியாது மாநில உரிமைக்கு குரல் கொடுப்போம் அங்கு இருந்து கொண்டு அவர்கள் நாம் என்ன செய்ய செய்ய வேண்டும் என கூறுவதை நம்மால் ஏற்க முடியாது இங்குள்ள மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நான் அதனை செய்வோம்.

திருவெறும்பூர் பகுதியில் அரைவட்ட சாலை பணியானது 2021ல் தொடங்க திட்டமிடப்பட்டது . வெற்றி பெற்ற பிறகு அதற்குரிய சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர் மூலம் அந்த பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி அதற்குரிய பணிகள் தொடரும் என்றார்.

இந்த விழாவில் திருச்சி எம்பிதுரை வைகோ மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் என பல ஆயிரம் கணக்கான கலந்து கொண்டனர்.

error: Content is protected !!