திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து நேற்று 3 பெண் குழந்தைகள் சுமார் 15, 17 வயது உள்ள பெண் குழந்தைகள் திடீரென்று மாயமாகி விட்டார்கள். இது தொடர்பாக ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன 3 சிறுமிகளும் வேளாங்கண்ணியில் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று மேற்கண்ட 3 சிறுமிகளையும் போலீசார் மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்தனர். மாயமான குழந்தைகளை விரைந்து கண்டறிந்து பத்திரமாக மீட்ட தலைமைக்காவலர் ஜான் ஜோசப் மற்றும் காவலர் செந்தில் ஆகியோரின் நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
