Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பூர்- ஒடிசா- கட்டிட பணியாளரின் சைக்கிள் பயணம்

திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக கட்டிட பணிகளில் ஈடுபட்டு வந்த ராகவன் என்னும் நபர் தனது சொந்த மாநிலமான ஒடிசா செல்ல தீர்மானித்தார். நண்பர் ஒருவர் கேரளாவில் இருப்பதால் அவரைப் பார்த்துவிட்டு புறப்படும் வேளையில் சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். இதனை அடுத்து கேரளாவில் சாதாரண சைக்கிளை வாங்கிய ராகவன் தேசிய கொடிகளை கட்டி புறப்பட்டார். பொள்ளாச்சி வழியே தேசிய கொடியுடன் சென்ற ராகவனை பொதுமக்கள் ஆச்சிரியத்துடன் கண்டு

உற்சாகப்படுத்தினர். இது குறித்து ராகவன் கூறும் பொழுது.. நான் தமிழ்நாட்டில் கட்டிடப் பணி செய்வதற்காக வந்தேன். தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள் எனக்கு உற்சாகமும்

ஆதரவும் அளித்தனர். இங்குள்ள இளைஞர்கள் நட்பாக பழகக் கூடியவர்கள் தமிழ்நாடு ஒரு மிகச்சிறந்த மாநிலம் என தெரிவித்தார். மேலும் 1800 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒடிசா மாநிலத்திற்கு நான் சைக்கிளில் செல்ல தீர்மானித்து புறப்பட்டு உள்ளேன். மேலும் செல்லும் வழியில் எனது நண்பர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளேன் என ராகவன் தெரிவித்தார்.

error: Content is protected !!