Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதல் தோல்வி: தஞ்சை பெண்போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (24). கடந்த 2023 ம் ஆண்டில் காவல் துறையில் சேர்ந்த இவர் தஞ்சாவூர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.  இவர்  தஞூசை மணிமண்டபம் அருகே உள்ள ஆயுதப்படை காவலர்  குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார்.

நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலை காவேரி செல்வி வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் காதல் தோல்வி காரணமாக உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து தெற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!