Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தக்காளி விலை கிடுகிடு உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

தக்காளி விலை கிடுகிடு உயர்வு... மக்களுக்கு அடுத்த ஷாக்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளியின் வரத்து குறைந்த அளவில் வருவதால் வியாபாரிகள் தக்காளியை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். வழக்கமாக 15,000 தக்காளி பெட்டிகள் கொண்டு வந்த நிலையில் தற்போது 3000 பெட்டிகள் மட்டுமே கொண்டுவரப்படுகிறது.

இதனால் முதல் ரக தக்காளி பெட்டிகள் மற்றும் இரண்டாம் ரக தக்காளி பெட்டிகள் ரூ.250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் ரக தக்காளி பெட்டிகள் ரூ.700 இரண்டாம் ரக தக்காளி பெட்டிகள் ரூ. 650 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.50 சில்லறை விலையில் ரூ.70 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வறட்சியின் காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!