2026ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்றுள்ளது. சசிகுமார், சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் 2025ஆம் ஆண்டு வெளியான இப்படம், ஈழ அகதிகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சிறந்த திரைப்படம், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் ஆகிய பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் விருது பெற்றுள்ளனர்.
