Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்..!!

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்..!!

முதலமைச்சர் விஜய் நாளை தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த, பிறகு சாலை மார்க்கமாக தாராபுரம் செல்கிறார். அவர் வருகைக்காக போக்குவரத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் விஜய் நாளை (புதன்கிழமை) கோவை வரவுள்ளார். இதற்காக கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து, சின்னியம்பாளையம், ஏர்போர்ட் வழியாக மாநகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.

நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் நீலாம்பூரில் எல் அண்ட் டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர். ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம். கோவை மாநகருக்குள் இருந்து அவினாசி சாலை வழியாக வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், லட்சுமி மில்ஸ் சந்திப்பில் யுடர்ன் செய்து புலியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக எல் அண்ட் டி பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

கோவை மாநகரில் இருந்து அவினாசி சாலை வழியாக மாநகருக்கு வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள், அவினாசி சாலை, வி.கே ரோடு வழியாக வரும் வாகனங்கள், மசக்காளிபாளையம் சாலை வழியாக சிங்காநல்லலூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அவிநாசி சாலை, ஹோப்ஸ் வழியாக வரக்கூடிய வாகனங்கள், டைட்டல் பார்க் சந்திப்பில் யுடர்ன் செய்து காமராஜர் சாலை, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

காளப்பட்டி சந்திப்பில் இருந்து சித்ரா அவினாசி சாலை வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் காளப்பட்டி சந்திப்பில் இருந்து தென்னம்பாளையம் வழியாக அவினாசி சாலைக்கு செல்லலாம்.

கோல்ட்வின்ஸ் சாலையில் இருந்து அவினாசி சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஹவுசிங்யுனிட் ரோடு மாருதி பேக்கிரி ஜங்சனில் இருந்து வலது புறம் திரும்பி விரையம்பாளையம் சாலை வழியாக காளப்பட்டி சந்திப்பிற்கு செல்லலாம்.

முதலமைச்சர் வருகையை ஒட்டி 30.9.26 தேதி, விமான நிலையத்திற்கு பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் வரும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள், தங்களது பயண நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை கால் டாக்ஸிகள் மற்றும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்திற்குள் பார்க்கிங் செய்வதற்கு அனுமதியில்லை. நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளனர்.

error: Content is protected !!