தமிழகத்தில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் 19 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதில் 18 யானைகள் இயற்கை காரணங்களினாலும், ஒரு யானை விபத்தினாலும் உயிரிழந்துள்ள நிலையில், முதுமலை மற்றும் சத்தியமங்கலத்திலேயே அதிகபட்சமாக தலா 8 யானைகள் இறந்துள்ளன. யானைகளின் எண்ணிக்கை 3,170 ஆக அதிகரித்துள்ள நிலையில், வனத்துறை மத்திய அரசிற்கு இது குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைகளை சமர்ப்பித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
