Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருச்சி அருகே பரிதாபம்... 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருச்சி, மண்ணச்சநல்லூர் எம்.ஆர். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி.
விவசாயி. இவரது மகன் ஜாய் தனுஷ் (11). இவர் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜாய் தனுஷ் தங்களின் விவசாயத் தோட்டத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜாய் தனுஷின் இடது காலில் கட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டது. இதில் வலியால் துடிதுடித்த அவரை பெற்றோர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் ஜாய் தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து ரவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!