மதுரை புதூர் பி.எம் நகர் பகுதியில் இன்று நடைபெற்ற பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் சிக்கி, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி முகேஷ் மாண்டல் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்ட நிலையில், புதூர் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை புதூர் பி.எம் நகர் பகுதியில் இன்று வழக்கம்போல் பாதாள சாக்கடைக்கான ராட்சதக் குழி தோண்டப்பட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் மாண்டல் அந்த ஆழமான குழியின் உள்ளே இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாகப் பாதையின் பக்கவாட்டில் இருந்த மண் திடீரென சரிந்து குழfloating விழுந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் டன் கணக்கிலான மண் சரிந்து விழுந்ததில், முகேஷ் மாண்டல் முழுமையாக மண்ணுக்குள் புதைந்து போனார். சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்க முயன்றும் ஆழம் அதிகமாக இருந்ததால் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மண்ணை அகற்றி முகேஷ் மாண்டலை மீட்டனர். எனினும், மூச்சுத்திணறல் காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய புதூர் போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
