நாடாளுமன்ற கூட்டத்தில் நேற்று மத்திய அரசு திருநர் திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இந்த திருத்த சட்டத்தில் திருநங்கைகள் என்ற பெயரை அங்கீகரிக்காமல் அரவாணிகள் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்த அவர்கள் திருநங்கைகளை போலவே திருநம்பிகளும் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்படுவதாகவும்., அவர்களையும் பாதுகாக்காத அளவுக்கு தான் இந்த சட்டம் அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு பெரும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவரிடம் எங்கள் அந்தரங்க உறுப்புகளை காண்பித்து அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது மனவருத்தம் அளிக்கிறது. இவை அனைத்தும் மனித உரிமை மீறலாக பார்க்கிறோம். எனவே திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு எதிரான இந்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என கூறி திருநங்கைகள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன முழக்கங்களுடன் ஆர்பாட்டம் நடத்தினர். குறிப்பாக இந்த சட்டத்தை எதிர்த்து தேசிய திருநங்கை கவுன்சிலில் இருந்து திருநங்கை கல்கி சுப்ரமணியம் என்பவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

