Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி  திருச்சி தெற்கு வடக்கு மற்றும் மாநகர் புறநகர் இணைந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்
பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி, பூனாட்சி, மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா குமார், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் ரத்தினவேலு

மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு  முழக்கம் இட்டனர்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டி,கண்டன முழக்கம் இட்டதோடு – இதே நிலை தமிழகத்தில் நீடித்தால் தமிழக மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!