Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி: 9ம் வகுப்பு மாணவன் மாயம்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் 4வது குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் ஹேமநாதன் (40)இவரது மகன் நீலீஸ் (14). இவர் திருச்சியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
பள்ளியில் சென்று கேட்ட பொழுது அவர் வரவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து நீலிசை பல இடங்களில் தேடிப் பார்த்தனர் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை ஹேமநாதன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவன் நீலிசை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!