திருச்சி அதிமுக புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, மாநகர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் சீனிவாசன். இவர் அதிமுக ஆட்சியில் திருச்சி மாநகராட்சி துணை மேயராக இருந்தவர். பின்னர் அமமுக கட்சியில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர். தற்போது மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கும் வட்ட செயலாளர்கள் சிலருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 18ம் தேதி 23 வார்டு செயலாளர்கள் சேலம் சென்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியை சந்தித்து மாவட்ட செயலாளர் சீனிவாசனை மாற்ற வேண்டும் என முறையிட்டனர்.அப்போது மா. செ. சீனிவாசன் குறித்து தாங்கள் கூறும் கருத்துக்களை கேட்க வேண்டும் என்ற அனைவரும் கோரிக்கை வைத்தனர். 

