Skip to content

கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் விஜய் (27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணமாகவில்லை.  நேற்று கருப்பையா மற்றும் அவரது மனைவி வேலைக்காக வெளியே சென்றனர்.  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜய் தூக்குப் மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவரது தந்தை கருப்பையா, விஜய் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை உடனடியாக  மீட்டு கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து கே.கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் கடன் தொல்லையால் தூக்கு போட்டு இருந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!