திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் மாயராஜ். இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குக் கடந்த 24ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாயராஜ் உயிரிழந்தார்.
