Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீபாவளி வியாபார அனுமதி கோரி திருச்சி மாநகராட்சி முற்றுகை!

தீபாவளி வியாபார அனுமதி கோரி திருச்சி மாநகராட்சி முற்றுகை!

திருச்சி என்.எஸ்.பி. சாலையில் கடந்த பல வருடங்களாக 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்ட நிலையில், இது நாள் வரை அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள சூழலில், அங்கு முன்பு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு மட்டும் அந்த 15 நாட்களுக்கு என்.எஸ்.பி. ரோட்டில் தற்காலிகமாகக் கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துத் தரைக்கடை தொழிற்சங்கத்தினர், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!