Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபர் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்.

திருச்சி சிந்தாமணி புதுத் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது43) இவர் கடந்த 16ந்தேதி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார் அப்போது எதிர்பாராத வகையில் முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதினார்.இதில் அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகளப்பாக மாற அந்த நபர் பாஸ்கரை இரு சக்கர வாகனத்தின் சாவியால் நெஞ்சு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தாக்கி குத்தி காயமடைந்தார். இதையடுத்து பாஸ்கர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து பாஸ்கரை தாக்கிய மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

திருச்சி பெரிய கடைவீதி சமஸ்பி ரான் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52)தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நாகலட்சுமி (வயது45.) மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் மேலும் அவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன் கடந்த 17 ந் தேதி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயன்றார் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து கோட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்


தாயுடன் ஏற்பட்ட பிரச்சனையால்

திருச்சி சிந்தாமணி காந்தி நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 30) இவருக்கும் கோபிநாத் என்பவருக்கும் திருமணம் நடந்தது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் கோபிநாத் இறந்துவிட்டார் இதனால் மகாலட்சுமி தனது சிந்தாமணியில் உள்ள பெற்றோர் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் அவருக்கும் அவரது தாயார் பத்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதனால் மகாலட்சுமி கடந்த 17 ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பிறகு உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மனைவி தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி இபி ரோடு ஜான் தோப்பு பாரதியார் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் இவரது மனைவி கீர்த்தனா (வயது 28.) இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகன்ராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்தார் இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தனா நேற்று தன் வீட்டில் அறையில் திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொழிலதிபரிடம் 25 லட்சம் மோசடி

திருச்சி சிந்தாமணியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 53) இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சினிவாசன் என்பவருக்கு சொந்தமான உணவகத்தை வாங்க கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தார் இதனால் அவரிடம் ரூ25 லட்சம் பணத்தைக் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தவணையில் கொடுத்து இருந்தார். விரைவில் அந்த உணவகத்தின் உரிமத்தை பால்ராஜ் பெயரில் மாற்றுத்தருவதாக சீனிவாசன் கூறி வந்தார் வெகு நாட்கள் ஆகியும் அவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு எதுவும் செய்யாமல் இருந்து வந்தால் இது குறித்து பால்ராஜ் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து பால்ராஜ் கடந்த 7ந்தேதி சீனிவாசனிடம் கடையின் நிலவரம் குறித்து கேட்டபோது சீனிவாசன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளார் இது குறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவுபோலீசார் சீனிவாசன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!