Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் பல்வேறு போலீஸ் நிலையங்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் போதை மாத்திரை விற்பவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியில் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த இபி ரோடு பகுதியை சேர்ந்த சச்சின் (வயது 22) வரகனேரியை சேர்ந்த உதயசங்கர் ( 20 )ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம், ஊசிகள் மருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!