Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே பெண் இன்ஸ்பெக்டரின் ரோந்து வாகனம் பறிப்பு….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் பெண் காவல் ஆய்வாளரின் ரோந்து வாகனம் பறிப்பு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

சிறுகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் ஆய்வாளர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து மக்கள் கொடுக்கும் புகார்களை சரியாக விசாரிப்பதில்லை என்றும், முறையாக ரோந்து செல்வது இல்லை என்றும் புகார் எழுந்தது. அதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவரை நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது பெண் காவல் ஆய்வாளர் மழுப்பலாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.இதனால் கோபமடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோந்து செல்லாமல் காவல் நிலையத்திலேயே நிறுத்தி வைப்பதற்கு போலீஸ் ஜீப் உங்களுக்கு தேவையில்லை.உடனே அந்த ஜீப்பை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி சிறுகனூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.இந்த நடவடிக்கையால் பணியில் மெத்தனமாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!