திருச்சி: கல்குவாரியில் தவறி விழுந்தவர் பலி
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அய்யனார் கோவில் கல்குவாரி, சுமார் 60 அடி ஆழம் உள்ளது. இதில் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தவறி விழுந்ததாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு, ரப்பர் படகுமூலம் தேடி அவரது உடலை சடலமாக மீட்டு கேகே நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
