Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கஞ்சா விற்ற ரவுடி கைது….. 1 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல்…

திருச்சி,  கே.கே நகர் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கே.கே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வள்ளி டீ ஸ்டால் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கே.கே நகர் எல்.ஐ.சி காலனி சோமநாயக்கன் பட்டி தேவர் தெருவை சேர்ந்த சக்தி வயது (21) என்ற ரவுடியை போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!