Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல்… தொழிலாளி கைது

வடலுார்: டாஸ்மாக் ஊழியர் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
வடலுார் அடுத்த கருங்குழி செல்லும் வழியில், அரசு மதுபான டாஸ்மாக் கடை (கடை எண் : 2438) அமைந்துள்ளது. இங்கு சுப்பராயன், 56; என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.
இந்த மதுபான கடைக்கு வழக்கமாக வரும் நபர் ஒருவர், சுப்புராயனிடம் அவ்வப்போது மதுபாட்டில் வாங்கி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல மதுபாட்டில் வாங்கிய அந்த நபர், சுப்புராயனிடம் ஓசியில் மதுபானம் கேட்டுள்ளார். இதற்கு சுப்பராயன் தர மறுத்ததால் அந்த நபர் ஆத்திரமடைந்து, சுப்புராயன் கழுத்தில் கத்தியை வைத்து தகராறில் ஈடுபட்டார்.
மேலும், அவர் காரை ஏற்றி கொலை செய்து விடுவேன் என, கொலை மிரட்டல் விடுத்ததால் வடலுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், மிரட்டிய நபர், வடலுார், ஆர்.சி காமராஜ் நகரை சேர்ந்த கோழி (எ) ராஜேஷ்குமார், 40; என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!