Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ காட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

கரூர் ஸ்ரீ காமாட்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம- தரிசனம்

கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் ரோடு, பசுபதி லேஅவுட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன், அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய புதிதாக கட்டும் பணி நடைபெற்று முடிவடைந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்த பிறகு நான்கு கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு இன்று காலை மேளதாளங்கள் முழங்க கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலச குடத்தை

சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தார்.

அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரூற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

அதை தொடர்ந்து மூலவர் காமாட்சியம்மனுக்கும், பரிவார தெய்வமான விநாயகர் ,பாலமுருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் பூஜைக்கு பட்ட புனிதத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு, பசுபதி லோட் பகுதியில் உள்ள ஆன்மீக ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!