Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பருவமழை முன்னேற்பாடு பணி…. திருச்சி மேயர் அன்பழகன் ஆய்வு

திருச்சி  மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையை  எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1 மற்றும் 3வது  மண்டலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜின்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை  மேயர் மு. அன்பழகன்  பார்வையிட்டார்.

மண்டல குழு தலைவர்கள். மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், மற்றும் மாமன்ற உறுபினர்கள், அலுவலர்களும் இதனை பார்வையிட்டனர். மழை அதிக அளவு பெய்தால் மழை நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக மேயர் அன்பழகன் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் உதவி ஆணையர் . சரவணன் , ஜெயபாரதி , உதவி செயற்பொறியாளர்  கிருஷ்ணமூர்த்தி மற்றும் இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!