Skip to content

திருச்சியில் பிரதமரிடம் தங்க பதக்கம் பெற்ற தஞ்சை மாணவிக்கு பாராட்டு…

தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமம் அகில இந்திய தொழில்நுட்ப அங்கீகாரம் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி குழுமத்தில் பாரத் மேலாண்மையில் கல்லூரியில் கடந்த 2022- 23ம் ஆண்டு எம்பிஏ படித்த தஞ்சையை சேர்ந்த மாணவி மார்ட்டினா ஜாய்ஸ் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். இதையடுத்து திருச்சியில் நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மாணவி மார்ட்டினா ஜாய்ஸ்க்கு தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினார்.

மாணவி மார்ட்டினா ஜாய்ஸ் தங்கப்பதக்கம் பெற்று பாரத் கல்வி குழும கல்லூரிகளுக்கு பெருமை சேர்த்ததையடுத்து பாரத் கல்வி குழும க செயலாளர் புனிதா கணேசன், மாணவியை அழைத்து பாராட்டுக்கள்

தெரிவித்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மாணவி மார்ட்டினா ஜாய்ஸ், கல்வி குழும செயலாளர் புனிதா கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் கல்லூரி முதல்வர் முனைவர் குமார், பாரத் கல்லூரி இயக்குனர் முனைவர் வீராசாமி, மேலாண்மையியல் கல்லூரி இயக்குனர் முனைவர் சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர்கள் மாணவியை பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!