Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் டீ மாஸ்டர் அடித்துக் கொலை

திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் அருகே ஏ யூ டி நகரை  சேர்ந்தவர்  சோமசுந்தரம் ( 45) இவர் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார், இவரது மகன் மோகன்ராஜ் ( 19 )  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்
இன்று காலை குடிபோதையில் சோமசுந்தரம் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்தாராம்.
அதை மோகன்ராஜ் தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில்  ஆத்திரம் அடைந்த மகன் மோகன்ராஜ் மரக்கட்டையை எடுத்து சோமசுந்தரத்தை தலையில் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்து  விழுந்த  சோமசுந்தரத்தை அங்கிருந்தவர்கள்  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ,அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து  ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன் ராஜை கைது செய்தனர்.

error: Content is protected !!