Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துறையூர் காய்கறி மார்க்கெட்டில் …. திருச்சி கலெக்டர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை  தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின்படி  மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள் கிராமங்களுக்கு சென்று தங்கி அங்குள்ள  மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு  நடவடிக்கை எடுப்பது இந்த திட்டத்தின்  நோக்கம்  ஆகும்.

இந்த திட்டத்தின்படி திருச்சி மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் நேற்று துறையூர் தாலுகா கண்ணனூர் கிராமத்தில்

முகாமிட்டு ஆய்வு நடத்தினார்.  இரவில் அங்கு தங்கிய கலெக்டர் இன்று காலை திருச்சி புறப்படும் முன்  துறையூர்  நகராட்சி காய்கறி  மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அங்கு வியாபாரிகள் , தூய்மை பணியாளர்களிடம் உரையாடினார்.  இந்த ஆய்வின்போது  துறையூர் சட்டமன்ற உறுப்பினர்  ஸ்டாலின் குமார்  , மாவட்ட ஊராட்சி தலைவர்  த. ராஜேந்திரன்   மற்றும் அரசு அதிகாரிகள்  உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!