Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடர வலியுறுத்தி தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும்மனு

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை 2026-2027 கல்வியாண்டிலும் தொடர வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட தன்னார்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்தனர். திட்டத்தின் பின்னணி:
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய, 27.10.2021 அன்று தமிழக அரசால் இத்திட்டம் தொடங்கப்பட்டது. டிசம்பர் 2021 நிலவரப்படி 2 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 1000 மையங்களில் 35 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். பள்ளி முடிந்து மாலை 2 மணி நேரம், விளையாட்டு, பாடல், செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டதால் மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர் நீட்டிப்பு:
மே 2023-ல் உலக சுகாதார அமைப்பு கொரோனா கட்டுக்குள் வந்ததாக அறிவித்த பிறகும், கற்றல் இடைவெளி குறைந்ததை அடுத்து ‘இல்லம் தேடிக் கல்வி 2.0’ என திட்டம் தொடரப்பட்டது. 2025-2026 கல்வியாண்டில் திட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தன்னார்வலர்களின் தொடர் கோரிக்கையால் ‘இல்லம் தேடிக் கல்வி 3.0’ என ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் திட்டம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தற்போதைய கோரிக்கை:
2026-2027 கல்வியாண்டிற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், கொரோனா காலத்தில் மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் மாணவர்களின் கற்றலுக்கு துணைநிற்கும் இத்திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும் என திருச்சி மாவட்ட தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!