Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பணத்தை திருப்பி கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்- பயங்கரம்

காவல் துறையில் பணியாற்றியவர் செல்வக்குமார். அவரது மறைவிற்கு பிறகு கிடைத்த பணப்பலனைக்கொண்டு செல்வக்குமாரின் மனைவி ரேக்கா தனது மகனையும், மகளையும் படிக்கவைத்துக்கொண்டு, திருச்சி துவாக்குடி பகுதியில் வாழ்ந்துவருகிறார். அவரிடம் இருந்த ₹30 லட்சம் பணத்தை அதிமுக பிரமுகர் எம்.பி.ராஜா என்பவர் வாங்கி ஏமாற்றிவிட்டார். இதுகுறித்த புகாரில் அதிமுக பிரமுகர் எம்.பி.ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ராஜாவின் மனைவி, “உடனே ஒரு நிலத்தை விற்று பணத்தை திருப்பிக்கொடுக்க ராஜா விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு வழக்கை திரும்ப பெறவேண்டும்” என நயவஞ்சகமாக பேசியுள்ளார். இதனை நம்பி எழுதிவாங்கிக்கொண்டு ரேக்கா வழக்கை திரும்பப்பெற்றார்.

இன்று பணத்தை கேட்க வீடுதேடி சென்றபோது, அதிமுக பிரமுகர் எம்.பி.ராஜாவின் மனைவி நளினி, அம்மா சுமதி, அக்கா கணவர் சந்தோஷ் ஆகியோர் வளவந்தான்கோட்டை பிரிவு ரோட்டில் வைத்து ரேக்கா மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அப்போது அருகில் இருந்தவர்கள் ரேக்காவை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அரசு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல்சிகிச்சைக்காக ரேக்கா பெல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!