Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செல்லாக்காசு சீமானே…..மன்னிப்பு கேள்………. விஜய் கட்சி கடும் எச்சரிக்கை

 நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  விஜய் கட்சி தொடங்கியதும் நம்முடன் தான் கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்த்தார்.  தம்பி விஜய் கட்சியுடன் கூட்டணி சேர தயார் என்று கூறி பார்த்தார். ஆனால் விஜய் சீமானை கண்டுகொள்ளவில்லை என்பதுடன், கட்சி தொடக்க விழாவில் சீமானையும் ஒரு பிடி பிடித்து விட்டார்.  இதனால்  சீமானுக்கு பேரதிர்ச்சி.   விஜய் மூலம் என்னென்னமோ செய்யலாம் என பார்த்தேன் இப்படி ஆகிவிட்டதே என்ற கோபத்தில்  விஜயை நேரடியாக தாக்கத் தொடங்கினார்.

கூமுட்டை, அழுகிய கூமுட்டை,  உனக்கு என்ன தெரியும், ஸ்கிரிப்ட மாத்து, அல்லது எழுதி தர்றவன மாற்று,

ஒண்ணு அந்த பக்கம் நில்லு, அல்லது இந்த பக்கம் நில்லு, நடு ரோட்ல நின்னா லாரியில அடிபட்டு செத்து போயிடுவ என்று  ஏகத்துக்கு பேசினார். இது குறித்து  2 தினங்களுக்கு முன் நடந்த விஜய் கட்சி செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில், மதுரை  வடக்கு மாவட்ட  தவெக இளைஞரணி சார்பில், விஜய் கட்சிக்காரர்கள் சீமானுக்கு கண்டம் தெரிவித்து  சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

அரசியலின் செல்லாக்காசு…. ச்சீ சீமானே…. வன்மையாக கண்டிக்கிறோம். தளபதியை பற்றி கூற உனக்கு என்ன தகுதி இருக்கு? உடனடியாக மன்னிப்பு கேள்,  இது எச்சரிக்கை அல்ல, கட்டளை என அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சுவரொட்டியால்  இது கட்சிகளுக்கும் மோதல் மேலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!