Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூரில் போலீசாரை தாக்கிய தவெக நிர்வாகி கைது

போலீசாரை தாக்கிய தவெக நிர்வாகி கைது

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த போலீசார் ஒருவரை தாக்கிய தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் போலீசார் வினோத் தனது வேலை முடிந்து அங்கு ஓய்வில் இருந்தார். பின்னர் அவர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, தவெக நிர்வாகி ராஜேஷ் என்பவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அங்கு வந்தார்.

மதுபோதையில் இருந்த ராஜேஷ், அங்கு அமைதியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்த போலீசார் வினோத்திடம் பேச்சு கொடுத்து தகராறு செய்தார். போலீஸ்காரர் எவ்விதப் பிரச்சினையிலும் ஈடுபடாமல் இருந்தபோதிலும், ராஜேஷ் போதையின் உச்சத்தில் ஆபாசமாகவும் திமிராகவும் பேசி வாக்குவாதத்தை வளர்த்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜேஷ் திடீரென போலீஸ்காரர் வினோத் மீது தாக்கினார். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!