Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழையால் பழுதான வாகனங்கள் இலவசமாக சரி செய்யப்படும்….. டிவிஎஸ் சலுகை

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம்  ஏற்பட்டு, வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இருசக்கர வாகனங்கள், கார்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அந்த வாகனங்கள் இனி பழுது பார்க்கப்பட்டால் தான் இயக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.   ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்  வாகனங்களையும் பழுது பார்க்க வேண்டியது இருந்ததால்  வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில்  அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் டிவிஎஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை ெ வளியிட்டது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு வேலைக்கான கூலிஎதுவும் இல்லாமல் இலவசமாக வாகனங்கள் பழுது பார்த்து தரப்படும் என்று  டிவிஎஸ் அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகையானது இன்று முதல் 18 ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!