Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்ணீர் லாரி பின்னால் கார் மோதி இருவர் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஜெயங்கொண்டம் நிலையை சேர்ந்த ராகவன் மகன் பிரதீப் (28) மற்றும் அதேபகுதியை சேர்ந்த தமிழரசன் மகன் பிரதீப் (28) உறவினர்கள் ஆவர். இவர்களது உறவினரான தனசேகரன் என்பவரது இறப்பில் பங்கேற்க வெளிநாட்டில் இருந்து வரும் உறவினர்களை அழைத்துவர இன்று காலை 8 மணியளவில் ஒரு காரில் மதுரை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர், காரை அதே பகுதியை சேர்ந்த கரண் (25) ஓட்டிவந்துள்ளார்.

இவர்களது கார் மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் மேலூர் அருகே தெற்கு தெரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது நான்கு வழிச்சாலையில் தடுப்பு சுவரின் மத்தியில் உள்ள செடிகளுக்கு லாரியின் மூலமாக எந்த வித முன்னெச்சரிக்கை தடுப்புகளும் வைக்காமல் லாரியை வலது பகுதியில் நிறுத்தி லாரி ஓட்டுநர் செல்வம் என்பவர் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்துள்ளார்.இந்த நிலையில், எதிர்பாராத விதமாக லாரியின் பின்னால் கார் மோதியுள்ளது. இதில் கார் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி இரண்டு பிரதீப்களும் பலத்த ரத்தக் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் ஓட்டுநர் கரண் படுகாயமடைந்தார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த கரணை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக தண்ணீர் லாரி ஓட்டுநர் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!