திருச்சி மாநகரில் சிங்கப் பெண் சிறப்பு அதி ரடிப்படை பிரிவுக்கு இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள் ளன.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக காவல் துறையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று சென்னையில் தொடங்கி வைத்த ரர்.இதையடுத்து திருச்சி மாநக ரில் சிங்கப் பெண் சிறப்பு அதி ரடிப்படை பிரிவில் திருச்சி வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு குழுக்கள் நியமிக் கப்பட்டுள்ளன. ஒரு குழு வில் 2 காவல் உதவி ஆய்வா ளர்கள், 4 காவலர்கள் மற்றும் ஓர் ஓட்டுநர் இடம்பெற்றுள் ளனர். அதன்படி திருச்சியில் உள்ள இரண்டு குழுக்களிலும் சேர்த்து 4 காவல் ஆய்வாளர்
கள், 8 காவலர்கள், இரண்டு ஓட்டுநர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.
ஒவ்வொரு குழுவும் ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் வீதம் இணைந்து ஷிப்ட் முறையில் 24 மணி நேர மும் பணியாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பிரிவு மாநகரின் முக்கிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை களை மேற்கொள்ளும் என போலீஸார் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்ட காவலர் கள் சென்னைக்கு பயிற்சிக்கு சென்றுள்ளதால் திருச்சி மாந கரில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று காவல் துறை தெரிவித் துள்ளனர்.
