சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் மின்சார ரயில்கள் எதிரெதிரே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி இரு ரயில்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் பீதியடைந்த சில பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் நடந்துச் சென்றனர். சென்னை கடற்கரை–தாம்பரம் வழித்தடத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர்.
